அமைதியான முறையில் நடந்து முடிந்த ரயில் மறியல் போராட்டம்..!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் அமைதியான முறையில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மூன்று மாதங்களை நெருங்கிக் கொண்டுள்ளது.
போராட்டங்களின் தொடர்ச்சியாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் 12:00 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ரயில் பாதையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதில் விவசாயிகள் தமது குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன . இதற்கிடையில் விவசாயிகளின் இந்த போராட்டத்தால் ரயில் சேவை மிக குறைந்தளவே பாதிக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.






