--- --:--:-- --

நிலநடுக்கத்தை பொருட்படுத்தாமல் மாணவர்களிடம் உரையாற்றிய ராகுல் காந்தி..!

11

நிலநடுக்கத்தை கூட பொருட்படுத்தாமல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வீடியோ கான்பரன்சில் மாணவர்களிடம் உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

சிகாகோ பல்கலைக்கழக அரசியல் பிரிவு மாணவர்கள் பேராசிரியர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்படும் நிலையில் அவரது பின்புறம் இருந்த பொருட்களும் ஆடின.

 

இதை கவனித்து நிலநடுக்கத்தை கூறிவிட்டு அவர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon