--- --:--:-- --

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவவில்லை..!

13

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு இல்லை என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாகக் கூறப்படும் கொரொனா வைரஸ் 2020ஆம் ஆண்டு முழுவதும் உலகை ஆட்டிப் படைத்தது.

 

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் சீனாவின் வூகான் நகரில் உள்ள வைரஸ் சோதனை மையத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவவிடப்பட்டதாக குற்றச்சாட்டில் எழுந்ததையடுத்து உலக சுகாதார அதிகாரிகள் சீனாவில் முகாமிட்டு ஆய்வு நடத்தினார்.

 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பீட்டர் வூகான் நகரின் ஆய்வகத்தில் இருந்து கொரொனா வைரஸ் பரவி இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

 

தங்களது ஆய்வின் போது சீன அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நகரில் அவசரநிலை என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon