--- --:--:-- --

மணப்பெண்ணை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த போட்டோகிராபர்..! கடுப்பான மாப்பிள்ளை..!

33

கல்யாண வீடு என்றாலே ஆடல் பாடல் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் மணமேடையில் மணப்பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபரை மாப்பிள்ளை அடித்த நகைச்சுவையான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மணமேடையில் மாப்பிள்ளையை சற்று தள்ளி நிற்குமாறு கூறிய போட்டோகிராஃபர் மணப் பெண்ணை சுற்றிசுற்றி புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளை சிறிது நேரத்தில் டென்ஷன் ஆகிறார்.

 

இதைத்தொடர்ந்து போட்டோகிராஃபர் மண்டையில் ஒரு அடி கொடுத்தார். மாப்பிள்ளையை கண்டு மணப்பெண் குலுங்கி குலுங்கி சிரித்தார். சிரிப்பை அடக்க முடியாமல் மணப்பெண் தரையில் அமர்ந்து சிரித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலையை கூலாக கையாண்ட மணப்பெண்ணுக்கு நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon