சர்வசாதாரணமாக சாலையை கடந்து செல்லும் சிறுத்தை..!
கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் மலையோர பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையை சர்வசாதாரணமாக கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கோதையாறு பகுதியில் மலைவாழ் மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் குடியிருப்புகள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்புகளும் உள்ளன.
அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் கூறி வந்த நிலையில் இந்த மாதம் இரண்டாம் தேதி இரவு கோதையாறு மின் உற்பத்தி நிலையத்தில் பின்புறம் உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.






