--- --:--:-- --

நாளை தமிழகம் திரும்பும் சசிகலா..!அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணிக்க இருப்பதாக தகவல்..!

1

பெங்களூருவில் இருந்து நாளை தமிழகம் திரும்பும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

கொரொனாவில் இருந்து மீண்ட அவர் பெங்களூரு புறநகர் பகுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன போது அதிமுக கொடி பொருத்திய ஜெயலலிதாவின் காரில் பயணித்து சசிகலா பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

இந்நிலையில் அதிமுக கொடி பொருத்திய காரில் நாளை அவர் தமிழகம் திரும்ப உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் இரண்டு முறை அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சசிகலா, டி‌டி‌வி தினகரன் தரப்பில் முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon