--- --:--:-- --

சரவணா ஸ்டோர்ஸில் நகை வாங்குவது போல நாடகமாடி நகையை திருடி சென்ற பெண்கள்..!

2

சென்னை பாடி பகுதியிலுள்ள சரவணா ஸ்டோர்ஸில் நகை வாங்குவது போல நாடகமாடி நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

 

பரபரப்பாக இயங்கி வரும் கடையில் விற்பனை முடிந்து இரவு கணக்கு சரி பார்க்கும் போது 12 சவரன் செயின் திருட்டு போனது தெரிய வந்ததையடுத்து ஊழியர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்கள் நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

 

கடையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற பெண்களை தேடி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon