--- --:--:-- --

ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும்..!

1

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று பேரவையில் என்று மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. திருவள்ளுவர் பல்கலை கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று ஒன்று அமைப்பதற்காக மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

திருவள்ளூர் பல்கலைக்கழகம் வேலூரில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதலமைச்சர் வேலூரில் இருக்கக்கூடிய திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படும் என்று கூறினார்.

 

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருக்கக்கூடிய கல்லூரிகள் ஒன்றாக இணைத்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கூறியது. அந்த பல்கலைக்கழகம் தற்போது சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது. அதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon