--- --:--:-- --

ரூபாய் நோட்டில் சுபாஷ் சந்திரபோஸின் படம்..!

2

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடும் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சிட்டு அவரை சிறப்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் ஆனந்தி அவர்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon