--- --:--:-- --

விளையாடிவிட்டு குட்டி மானை வீட்டிற்கு அழைத்து வந்த சிறுவன்..!

8

மெரிக்காவில் விளையாட சென்ற சிறுவன் ஒருவன் திரும்பி வருகையில் தன்னுடன் ஒரு குட்டி மானை அழைத்து வந்த செயல் தாய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வெர்ஜீனியா மாகாணத்தில் விடுமுறையை செலவிட தாயுடன் சென்ற சிறுவன் ஒருவன் அருகே விளையாடி விட்டு திரும்புகையில் குட்டி மானை அழைத்து வந்த வினோத செயல் அரங்கேறியுள்ளது.

 

இதனைக் கண்டு முதலில் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் உடனடியாக மானுடன் தன் மகன் நின்றதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 28,000 ஷேர்களையும் தாண்டி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon