--- --:--:-- --

திமுக ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்..!

2

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அந்தக் கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

 

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

 

இதற்கான மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரை அரசரடியில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

ஸ்டாலின் பேசுகையில் திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை நினைவுகூர்ந்து பட்டியலிட்டார். கொரொனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றிய அரசு ஊழியர்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon