--- --:--:-- --

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கையால் மாற்று செயலிக்கு மாறிய பயனாளர்கள்..!

3

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கையால் அதிருப்தி அடைந்துள்ள பயனாளர்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வாட்ஸ்ஆப் தொடர்புக்கு உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலி தனது உரிமையை கொள்கையை மாற்றி அமைத்துள்ளது.

 

அதன்படி பயனாளிகளின் தகவல் அந்த நிறுவனத்தை ஏற்கனவே விலைக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக்கிற்க்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

 

இரண்டே நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் மாற்று செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதியதாக அதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 

வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை மாற்றி அமைப்பதாக கூறிய போதே சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துமாறு உலகில் பணக்காரரான நிறுவன அதிபர் பரிந்துரைத்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon