உத்தரப்பிரதேசத்தில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..!

த்தரப்பிரதேசத்தில் நடு சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். காசியாபாத் அருகே உள்ள லோனி என்ற இடத்தை சேர்ந்த அஜய் என்பவரின் சகோதரர் சஞ்சய் என்பவருக்கும் கோவிந்த் என்பவருக்கும் இடையே தகராறு இருந்தது.

 

இது பற்றி காவல் நிலையத்தில் அஜய் புகார் கூறியதால் ஆத்திரமடைந்த கோவிந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை நடுச்சாலையில் கட்டையால் அடித்துக் கொண்டுள்ளார்.

 

இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள் படுகாயமடைந்த அஜய்யை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.


Leave a Reply