--- --:--:-- --

திரையரங்குகளை திறக்க முதல்வரிடம் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்..!

2

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

 

நடிகர் கமல்ஹாசன் 70 வயது வரை நடித்துவிட்டு ஓய்வு பெறும் வயதில் அரசியலுக்கு வந்து இருப்பதாக கூறிய முதலமைச்சர் கமல் நடிப்பில் வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம் என்றும் அரசியலில் அவர் பூஜ்ஜியம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்ந்து பேசிய அவர் திரையரங்குகளை முழுமையாக திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தன்னை சந்தித்து கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon