மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களை இன்று முதல் திறக்க அனுமதி..!

டாஸ்மாக் மதுபான கடைகளோடு இணைந்துள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகம் உள்ள இடங்களை தவிர்த்து பிற இடங்களில் உள்ள பார்களை திறக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பார்களில் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இருந்தன .தற்போது 9 மாதங்களுக்கு பிறகு பார்கள் திறக்கப்பட உள்ளன.


Leave a Reply