கோவை : அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் கெண்டேபாளையத்தில் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் தலைமையில் சிறப்பு மக்கள் கிராம சபை கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் !!!

ண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துகளில் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்தார்.

 

அதன் ஒருபகுதியாக கோவை வடக்கு மாவட்டம் காரமடை ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கெண்டேபாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே எடுத்து கூறப்பட்டது.

 

மேலும்,பொதுமக்களிடம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.பின்னர்,சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகள் குறித்து நேரடியாகவும் விசாரிக்கப்பட்டு,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குறைகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

மேலும்,அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை என்ற துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு கூட்டத்தில் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு உள்ள குறைகள் குறித்த மனுக்களையும் ஒன்றிய செயலாளர் வெள்ளியங்காடு சுரேந்திரன் பெற்றுக்கொண்டார்.

 

மேலும்,தமிழக அரசின் தோல்விகள் குறித்தும், அ.தி.மு.க. வை. நிராகரிக்கிறோம்  எனும் தலைப்பில் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கி 10 நாட்களுக்கு கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 16 ஆயிரம் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்,பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அண்மையில் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்திருந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கெண்டேபாளையத்தில் நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டம் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply