கோவை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தாத கடைக்கு ” பூட்டு “.மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அதிரடி !!!

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ” திடீர் ” ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது,கோவை மத்திய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த தனியார் கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு கடை பூட்டப்பட்டது.

 

மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு ரூ.200 ம் அபராதமாக விதிக்கப்பட்டது.

 

மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் 10 நபர்களுக்கு தலா 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

 

ஆய்வின் போது,மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ்,உதவி நிர்வாக பொறியாளர் கருப்புசாமி,மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.மாநகராட்சி ஆணையர் அதிரடியால் ஆடிப்போயுள்ளனர் பொதுமக்கள்.


Leave a Reply