தமிழக முதல்வர் எடப்பாடி சேலம் செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.அவரை,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் ” வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும்,பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிப்பதா ? கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கேள்வியெழுப்பினார்.
மேலும்,நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான பாலம் கட்டும் பணி முடிவுற்று விரைவில் திறக்கப்படும்.சென்னை போரூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய திமுகவினர் அப்படியே விட்டு விட்டனர். நிலத்தைக் கூட கையகப்படுத்த வில்லை எனவும், அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தன் சொத்து விவரங்களை வெளியிட தயாரா ? எனவும் கேள்வியெழுப்பினார்.
மேலும்,அதிமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப் படவில்லை என திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.சென்னையில் தற்போது 15 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக எனவும்,
மு.க ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும்,குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், கமலஹாசனுக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்ன தெரியும் என கேள்வியெழுப்பினார்.
மேலும்,பா.ஜ.க மற்றும் அதிமுகவின் கூட்டணி தொடர்ந்து நீடிப்பதாகவும்,அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் எனவும்,மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் தலைவராக என்ன தகுதி இருக்கிறது.வேறு தலைவர்களை திமுகவில் ஒருபோதும் முன்னிலைப் படுத்த மாட்டார்கள்.வாரிசுகளின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
முதல்வரின் செய்தியாளர் சந்திப்பின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ஜூனன்ஓ.கே.சின்னராஜ்,வி.பி.கந்தசாமி,முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.