அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

டுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் முப்பதாம் தேதி வரை மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் தென் மேற்கு, மத்திய தெற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Leave a Reply