கூலி தொழிலாளி ஒருவர் எரித்துக் கொலை..!

கூலி தொழிலாளி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாராசுரம் அருகே உள்ள கணபதி நகரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தவர் ஆவார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வீட்டு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை ஸ்ரீதர் இறந்து கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீதரின் ஆடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் முன்விரோதம் காரணமாக எரித்துக் கொல்லப்பட்டாரா அல்லது அடித்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தாராசுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply