மாடனா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவருக்கு ஒவ்வாமை..!

மெரிக்காவில் மாடனா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட மருத்துவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை தொடர்ந்து மாடனாவின் தடுப்பு மருந்தும் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

 

பாஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர் உசைனுக்கு மாடனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. உடனடியாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து இதயத் துடிப்பும் அதிகரித்துள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Leave a Reply