கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதும் நொடியில் மனைவி உயிர் விட்ட சம்பவம் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் புதிய அண்ணாநகரில் நிகழ்ந்துள்ளது. இங்கு ஏரியில் மீன்பிடித்து வாழ்ந்து வந்த 85 வயது ஏகாம்பரம் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பகல் 12.30 மணிக்கு தந்தை இறந்த மரண செய்தியை அவரது மகன் பாலன் தனது தாய் ராஜம்மாளிடம் இரவு 10.30 மணிக்கு தெரிவித்துள்ளார். கணவர் இறந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சியடைந்த ராஜம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய சில நொடிகளிலேயே உயிர் பிரிந்துள்ளது.
வாழ்க்கையில் இணைபிரியாமல் வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் மரணத்தையும் ஒரே நாளில் தழுவியுள்ளனர். வைகுண்ட ஏகாதசி நாளில் உயிரிழந்த தம்பதிக்கு அந்த பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.