மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்குப் பின் விலகியுள்ளது.!
பிரான்சின் முன்னாள் பேரரசனும், ராணுவ தலைவருமான மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்குப்பின் விலகியுள்ளது. பிரான்சின் முன்னாள் பேரரசரும், முன்னாள் ராணுவ தலைவருமான மாவீரன் நெப்போலியன் பிரிட்டன் , பிரான்ஸ் இடையே நடந்த போருக்குப் பின் பிரிட்டன் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டான்.
ஆப்பிரிக்கா அருகே உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அவர் புற்றுநோயால் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால் என்ன நடந்தது அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்காமல் இருந்தது.
இந்தநிலையில் 1821 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஒன்று செயிண்ட் ஹெலனா தீவிலிருந்து சென்னையின் அப்போதைய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவுக்கு அனுப்பப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
அதில் மாவீரன் நெப்போலியன் மே 5ஆம் தேதி மாலை உயிரிழந்ததாகவும் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட கூறாய்வு முடிவில் அவர் உடல் புற்றுநோயால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நெப்போலியனின் தந்தையும் புற்றுநோயால் இறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.






