--- --:--:-- --

சென்னையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன்..!

10

சென்னையில் சாலை தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ஜெயராமன் மகன் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய விபத்தில் சிக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய கைலாஷ் அருகில் கோட்டூர்புரம் செல்லும் சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏசி கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

 

காரில் இருந்தவர்களை மீட்டு போலீசார் விசாரித்த போது காரை உதவி ஆணையர் மகன் நவீன் ராஜ் குடிபோதையில் ஓட்டி வந்த காரில் நண்பர்கள் ராஜா அரவிந்த் ஆகியோர் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து நவீன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon