--- --:--:-- --

திமுக எம்.பி.ஆ.ராசா மீது அவதூறு வழக்கு.! வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது !!!

திமுக எம்.பி.ஆ.ராசா மீது அவதூறு வழக்கு.! வாபஸ் பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது !!!

திமுக எம்.பி.ஆ.ராசா மீது அவதூறு வழக்கு.வாபஸ் பெறக்கோரி பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அறிவரசு தலைமையில் ஆர்ப்பாட்டம்,சாலை மறியல்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கைது .

 

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும் திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ஆ.ராசா அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தமிழக அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதுகுறித்து காவல்துறை மூலம் கோழைத்தனமாக தன் மீது முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஆ.ராசாவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

 

இந்த நிலையில் இன்று கோவை மாவட்டம் வீரபாண்டி பிரிவு பேருந்து நிலையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அறிவரசு தலைமையில் திரண்ட திமுகவினர் திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் ஆ.ராசா மீது பதியப்பட்ட. வழக்கை வாபஸ் பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,திடீரென திமுகவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 80 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.அப்போது,காவல் துறையினருக்கும்,போரோட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன்,பிளிச்சி கிரி,பேரூர் கழக செயலாளர்கள் கனகராஜ்,சுரேஷ்குமார், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன், முருகானந்தம்,மகளிர் அணியினர் செல்வி, சரோஜினி,மீனா கணேசன்,லதாசுகந்தி பிரியா என்கிற ரேகா ரேணுகா என்கிற ரங்கநாயகி,இளைஞர் அணி கிருஷ்ணகுமார், அந்தோணி,உதயகுமார், அருண் பிரபு,சசி, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் பாலு, காந்திநகர் முருகேசன், சேரநாடு கார்த்திகேயன், ராஜன், ராஜன் ரங்கராஜ், மாரிசாமி,கோபிநாத், கூடலூர் கணேசன், ரமேஷ் துரை, செந்தில், ஆர்வி நகர் சுந்தரம்,ஐடி விங் சுரேஷ்,கோவனூர் திருமூர்த்தி, ஆனந்தராஜ், நாய்க்கன்பாளையம் ஆனந்தராஜ்,கோவனூர் ராதாகிருஷ்ணன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

 

திமுக எம்.பி.ஆ.ராசா மீது பதியப்பட்ட வழக்கை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon