வெந்நீரை வானத்தில் வீசினால் ஐஸ்கட்டியாக மாறும் அதிசய நிகழ்வு..!
சீனாவின் மோகி நகரில் கொதிக்கும் வெந்நீரை வானத்தில் வீசி அவை உடனடியாக ஐஸ் துகள்களாக மாறுவதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களிக்கின்றனர்.
சீனாவின் குளிர்ச்சியான பிரதேசமாக கருதப்படும் மோகி நகரில் தற்போது -44 டிகிரி குளிர் நிலவுவதால் பனிப்பொழிவை இரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் அங்கு தற்போது 7 மணி நேரம் மட்டுமே வெளிச்சமாக உள்ளதால் உறையும் பணியையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் உற்சாகமாக சிற்பங்களை செய்து வருகின்றனர்.






