கமல்ஹாசன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் இன்று மதுரையில் தொடங்குகிறார். சீரமைப்போம் தமிழகத்தை என்கிற பெயரில் இன்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் முதலில் அவனியாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். மாலையில் கீழவாசலில் பரப்புரை மேற்கொள்ளும் கமல்ஹாசன் தமிழ்நாடு தொழில் வர்த்தக மையத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
பின்னர் கருப்பாரணியில் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றுஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.






