தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது Chance of rain in Tamil Nadu after the 16th ..!குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் தமிழகத்தில் தொடர்ந்து வட கிழக்கு திசை காற்று வீசுகிறது என்றார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16-ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிட்டார். அடுத்து வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.






