--- --:--:-- --

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையில் இன்னும் கூடுதலாக சிறப்புப்படைகள் அமைக்கப்படும்.இதனால் விவசாய பயிர்கள் சேதமும்,மனித உயிர்களும் பாதுகாக்கப்படும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

6

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறை மூலம் நொய்யல் ஆற்று அமைப்பில் விரிவாக்குதல்,புனரமைத்தல் மற்றும் நவீன மயமாக்குதல்,ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை மூலம் சாலை,குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்தும்,கூட்டுக்குடிநீர் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள்,விவசாய மக்களுக்காக செய்து முடிக்கப்பட்ட பணிகள்,செய்துகொண்டிருக்கும் பணிகள்,செய்யப்படவிருக்கும் பணிகள் பற்றி விவசாயிகளிடம் எடுத்து கூறியும் கருத்துக்களை கேட்டறியும் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பேரூரை அடுத்துள்ள பூலுவப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகளிடையே விவசாயிகளுக்காக செய்யப்பட்டு வரும் பணிகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.மேலும்,விவசாய சங்கத்தினரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.230 கோடியில் நொய்யலாறு தூர் வாரப்பட்டு வருகிறது.புனரமைப்பு முடிந்தவுடன் விவசாயம் மேலும் செழிக்கும்.அதே போல் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்படும்.

 

மேலும்,யானை-மனித மோதலை தடுக்கும் வகையில் ஏற்கனவே சிறப்புப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு வனத்துறையில் இன்னும் கூடுதலாக சிறப்புப்படைகள் அமைக்கப்படும்.இதனால் விவசாய பயிர்கள் சேதமும்,மனித உயிர்களும் பாதுகாக்கப்படும் எனவும் பேசினார்.

 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன்,பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங்,விவசாய சங்கங்களின் சார்பாக ஆறுச்சாமி, தனபால், தங்கராஜ், பெரியசாமி, ராஜ்குமார், காருண்யா பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon