--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 1209 பேருக்கு தொற்று உறுதி…17 பேர் உயிரிழப்பு!!

12

தமிழகத்தில் இன்று 1209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில்17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து கீழ் முகமாகவே இருந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1209 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 7 லட்சத்து 95 ஆயிரதது 240 ஆக உயர்ந்துள்ளது.

 

தினசரி கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாவோரை விட பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை கடந்த பல நாட்களாகவே அதிகமாக உள்ளது. இன்று 1302 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இன்னும் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,392 மட்டுமே ஆவர். இன்று 17 பேர் கொரொனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று 68,928 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் 1.27 கோடி பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon