--- --:--:-- --

கல்லூரி மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு..!

8

பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 11ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் வழியில் மூன்று மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்முறை தேர்வு ஆன்-லைன் மூலம் நடப்பதால் அதற்கேற்ப மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் ஆன்லைன் செய்முறை தேர்வுக்கு பொருத்தமான தளங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆன்லைன் தேர்வுகளை அந்தந்த கல்லூரிகள் நடத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

ஆய்வக பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீடு கேள்விகள் கேட்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு நடக்கும் மையங்களுக்கு பறக்கும் படையினர் வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon