--- --:--:-- --

ஸ்மார்ட் போன் மூலம் கொரொனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை..!

11

ஸ்மார்ட் போன் கேமரா மூலம் கொரொனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

விரைவாகவும் துல்லியமாகவும் ஸ்மார்ட் போன் கேமரா மூலம் கொரொனா தொற்றை கண்டறியும் சோதனை முறையை அமெரிக்காவின் யூசி பர்க்லே மற்றும் கிளாஸ் ஸ்டோன் இன்ஸ்ட்டிட்யூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதன் மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரொனா தொற்றை அறிந்துகொள்ள முடியும். இதற்காக சிறப்பு கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை அந்த கருவியில் வைத்து மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும். சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி கொரொனா வைரஸ் கிருமிகளை ஒளி வில்லைகளாக மாற்றும்.

 

ஸ்மார்ட் போன் கேமரா அந்த ஒளி வில்லைகளை பதிவு செய்யும் போது கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெளிவாக காட்டிவிடும் என கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon