--- --:--:-- --

ஜெர்மன் நாட்டு பெண்ணை திருமணம் செய்த சுவிட்சர்லாந்து இளைஞர்.!

3

விழுப்புரம் அருகே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜெர்மன் நாட்டு பெண்ணை இந்து திருமண முறைப்படி கரம்பிடித்தார். ஆரோவில் பகுதியில் பன்மொழி பயிற்சி மையம் நடத்தி வரும் சுவிட்சர்லாந்தை நாட்டை சேர்ந்த யான்லூசியிடம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அரோர் மோபலட் என்ற பெண் மொழிபெயர்ப்பாளராக 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

 

இருவரும் கடந்த ஓர் ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ஜோடிக்கு இந்து மத கலாச்சாரம் பிடித்துப்போகவே கொடு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

 

பட்டு வேட்டி சட்டையோடு, பட்டு புடவை கட்டிய மணமகளின் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். தொடர்ந்து அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தால் போன்ற சடங்குகளும் செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon