வேற்று கிரகவாசிகளுடன் ஒப்பந்தம் போட திட்டமிட்டாரா டிரம்ப்..!
வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலிய முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புக்கு தலைமை வகித்த ஹியின் ய்ஸ் அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில் வேற்றுகிரகவாசிகள் பூமியின் தன்மை குறித்து ஆராய்வதற்காக அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வேற்று கிரகவாசிகளின் இருப்பை உலகிற்கு பிரகடனப்படுத்தப்பட்ட முற்பட்டபோது மனிதர்கள் அச்சம் அடைவார்கள் என்பதற்காக வேற்றுகிரகவாசிகள் அவரைத் தடுத்ததாக வெளியிட்டிருக்கும் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






