ஈரோட்டில் குழந்தையை விற்ற கும்பல் சிக்கியது..!
ஈரோட்டில் குழந்தை விற்பனை கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அகிலா என்ற செவிலியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கோவையை சேர்ந்த சங்கரேஸ்வரி என்ற பெண் ஏழ்மை நிலையில் குழந்தையைப் பெற்று வளர்க்க முடியாத நிலையில் யாராவது உள்ளனரா என கேட்டுள்ளார்.
அப்படி குழந்தை கிடைக்க கூடிய ஆள் கிடைத்தால் செவிலியர் அகிலாவுக்கும் குறிப்பிட்ட தொகையை தருவதாக பேசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அகிலா இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி செவிலியர் போன் செய்து குழந்தை ஒன்று விற்பனைக்கு இருப்பதாக அந்த கும்பலுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி ஈரோடு பேருந்து நிலைய பகுதியில் வந்த குழந்தை விற்பனை இடைத்தரகர்கள் சங்கரேஸ்வரி உட்பட 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.






