--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 1320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…! 1398 பேர் டிஸ்சார்ஜ்…! 16 பேர் உயிரிழப்பு!!

klgh

மிழகத்தில் இன்று 1320 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 1398 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 1320 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7, 90,240 ஆக அதிகரித்துள்ளது.மேலும் தமிழகத்தில் நேற்று 15 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இன்று16 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் நேற்று 353 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 346 ஆக பதிவாகியாகியுள்ளது. இதனால்
சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,17,550 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாகவே அதிக பட்ச பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று கோவையில் 139 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தின் எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் இரட்டை மற்றும் ஒற்றை இலக்கங்களிலேயே பாதிப்பு பதிவாகி உள்ளது.

 

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,398 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனையடுத்து இதுவரை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,788 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon