--- --:--:-- --

பிளிச்சி ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது !!!

பிளிச்சி ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது !!!

மிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள பிளிச்சி ஊராட்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் உதயகுமார் தலைமையில் பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட மத்தம்பாளையம் பேருந்து நிலையத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.இதில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

அதனை தொடர்ந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஊராட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon