தொண்டியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம்..!
நடிகர் ரஜினிகாந்த் கட்சி அறிவித்ததையடுத்து திருவாடானை கிழக்கு ஒன்றியம் சார்பில் தொண்டி புதிய பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

திருவாடனை கிழக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார், இணைச்செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார், தொண்டி பேரூர் கழக பொறுப்பாளர் பெஸ்ட் ரவி, மகாசக்தி புரம் சண்முகம், வர்த்தக அணி பொறுப்பாளர் பாண்டித்துரை, ஜெயந்தன் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் கட்சி அறிவிப்பை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி தங்களுக்கு ஆதரவு தருமாறு நிர்வாகிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டு இனிப்புகள் வழங்கினார்.






