--- --:--:-- --

கட்டட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை..!

6

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கட்டட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் திருடி செல்லப்பட்டுள்ளனர். உத்தண்டி கண்டிகையை சேர்ந்த முனிநாதன் என்ற ஒப்பந்ததாரர் சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்க நேற்றிரவு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

 

காலை வந்து பார்த்த போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 200 சவரன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon