--- --:--:-- --

கொடைக்கானலுக்கு இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை..!

11

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவு புயல் வலுவிழந்து கொடைக்கானல் வழியே கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

அதனால் முன்னெச்சரிக்கையாக கொடைக்கானலுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வத்தலகுண்டு சாலை மற்றும் அடுக்கம் சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் இன்றி உள்ளூர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

நாளை சூழலை பொறுத்து மறு அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon