--- --:--:-- --

லாரி மோதி சக்கரங்களுக்கு இடையே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக தப்பினார்..!

6

நாமக்கல் அருகே டிப்பர் லாரி மோதி சக்கரங்களுக்கு இடையே விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் ஏற்காட்டில் சேர்ந்த தெரைசா என்பவர் நாமக்கல் எளச்சி பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்ப அங்குள்ள பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

 

சாலையில் வந்தவரின் பின்னால் திரும்பும் வகையில் வந்த டிப்பர் லாரி மோதியதில் அவர் லாரியின் இரு பக்க சக்கரங்களுக்கும் இடையே விழுந்தார்.

 

லாரி சிறிது தூரம் சென்று நின்ற நிலையில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon