உத்திரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..!
உத்திரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி பரிகத். இவருக்கு இரண்டு மகள்களும், நான்கு வயதில் கனேந்திரா என்ற மகனும் உள்ளனர்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோதுமை வயதுக்கு சென்றுள்ளார். பெற்றோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்துள்ளார்.
தகவலறிந்து வந்த விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இதுவரை மீட்கப்படாத நிலையில் குழந்தை நலமுடன் இருப்பதாக மீட்பு குழு தெரிவித்துள்ளது.






