டேராடூனில் பதுங்கிய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது.!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கிய சிறுத்தை பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டது. டேராடூனில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச் சுவரை தாண்டி குதித்து பெண் சிறுத்தை ஒன்று விமானங்களின் இரைச்சலில் பயந்து கட்டுமான பணிகளுக்கான இடத்தில் மறைந்து கொண்டது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை மீட்டு காட்டில் விட்டனர். ஒரு வயது நிரம்பி இருக்கும் அந்த சிறுத்தை உணவு அல்லது தண்ணீர் தேடி வந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






