--- --:--:-- --

வெப் தொடரில் கோவிலுக்குள் முத்தமிடும் காட்சி தொடர்பாக வழக்குப்பதிவு..!

2

சூட்டபில் பாய் என்ற வெப் தொடரில் கோவிலுக்குள் முத்தமிடும் காட்சி இடம் பெற்ற விவகாரத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் உட்பட 2 பேர் மீது மத்தியபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக பாரதிய ஜனதா யுவமோட்ஸாவின் தேசிய செயலாளர் கௌரவ் திவாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்திலும், மத உணர்வை புண்படுத்தும் விதத்திலும் இருக்கும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்த விவகாரத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மோனிகா உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon