--- --:--:-- --

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

5

மிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தென் கிழக்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இதனால் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon