--- --:--:-- --

திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!

1

ட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்கு திமுகவின் மாவட்ட நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

 

நேற்று காலை நீலகிரி மாவட்டம் மற்றும் புதுவை திமுக நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். மாலையில் சென்னையில் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 

மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே என் நேரு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

நேரமின்மை காரணமாக சென்னை தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon