--- --:--:-- --

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்..!

4

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

 

2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்களன்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

 

இதற்கான ஏற்பாடுகளை வருவாய், சுகாதாரம், விளையாட்டு மற்றும் காவல்துறையினர் செய்துள்ளனர். கொரொனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கும், சான்றிதழ் சரிபார்க்கும் அலுவலருக்கும் இடையே கண்ணாடி தடுப்புகள், பெற்றோர் அமரும் இடம், உணவருந்தும் என தனித்தனிப் பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

 

காலை 8 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் கதவுகள் திறக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். முதற்கட்ட கலந்தாய்வு பொதுப்பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 45 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி ஆணையை வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon