--- --:--:-- --

அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

1

அரசு விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு கல் குவாரி உரிமம் வழங்கிய கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் வானூர் எம்‌எல்‌ஏ சக்கரபாணியின் மகன் பிரபுவின் பெயரில் கல் குவாரி நடத்த அமைச்சர் சிவி சண்முகம் உரிமம் வழங்கியுள்ளதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

 

பொது ஊழியர்கள் தங்களுக்கும் தங்கள் உறவினர்களுக்கும் அரசுப்பணியை டெண்டர் இருக்கக்கூடாது என்ற நிலையை மீறி லைசன்ஸ் தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

குவாரியில் கடந்த மூன்றாம் தேதி நேரிட்ட விபத்தின் மூலம் இந்த விதிமீறல் அம்பலமாகியுள்ளதாகவும், விபத்து குறித்து எஃப்‌ஐ‌ஆர் இல் காவல்துறையினர் மிரட்டி அதிமுக எம்எல்ஏ வின் மகன் என்பதும் மறைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசின் டெண்டர்கள், கால் டாக்சிகள், குத்தகைகள் போன்றவைகளை அமைச்சர்களும் முதல்வர்களும் போட்டி போட்டுக்கொண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கும், உறவினர்களுக்கும் அளித்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாத காட்டாட்சியை நடத்தி வருவதாக ஸ்டாலின் சாடியுள்ளார்.

 

எனவே, அதிமுக எம்எல்ஏவின் மகனுக்கு அலிக்கப்பட்ட கல்குவாரி லைசென்சை ரத்து செய்ததோடு வழங்கிய அமைச்சர் சிவி சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon