--- --:--:-- --

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் 74 அகதிகள் உயிரிழப்பு..!

11

லிபியா அருகே கடலில் படகு மூழ்கியதில் அதில் பயணித்த 74 அகதிகள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. ஐரோப்பா செல்ல 121 பயணிகள் படகில் சென்றபோது கடலில் எழுந்த பேரலைகளால் சுமை தாளாமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த படகில் இருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 74 பேரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இரவு, பகல் என மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட இதுவரை 47 பேரை உயிருடன் மீட்டனர்.

 

அவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் முதல் மெடிடேரியன் கடல் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon