--- --:--:-- --

இனி மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் ஓ.டி.டி தளங்கள் செயல்படும்..!

6.1

இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், திரைப்படங்கள் மற்றும் பிற பதிவுகளை தங்கள் வழிகாட்டு விதிகளின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது குறித்து அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சரவையின் செயலகம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட இந்த அறிவிப்பை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இணையதள பதிவுகளை அரசின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வர வழிவகுக்கும் சட்டத்திருத்தம் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து ஆன்லைனில் பதிவு செய்யப்படும் செய்கைகள், திரைப்படங்கள், பிற ஒலி, ஒளிப்பதிவுகள் அனைத்திற்குமான வழிகாட்டு விதிகளை அரசு ஏற்ற உள்ளது.

 

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இயற்ற இருக்கும் வழிகாட்டு விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் செய்தி தளங்களுக்கும் சமூக தள பதிவர்களுக்கும், ஹாட்ஸ்டார் அமேசான் போன்ற இதர ஓ‌டி‌டி தள நிறுவனங்களுக்கு ஏற்படும்.

 

இணையதளங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லை என்ற புகார் நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில் அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon